நாட்டின் 77ஆவது குடியரசுத் தினவிழாவையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
குடியரசு தின விழாவில் ஆளுநராக ஆா்.என்.ரவி 5-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார். ஆளுநர் ரவி தேசியக் கொடி ஏற்றிவைத்தபின் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
தொடர்ந்து ஆளுநர் ரவிக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ராணுவம், கடற்படை, வான்படை பிரிவினர் அணிவகுத்து ஆளுநருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தின.
ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அடங்கிய ஊர்திகள் அணிவகுப்பு செய்தன. முன்னதாக இந்த நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த ஆளுநரை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள், நீதிபதிகள், அரசு செயலா்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி, மெரீனா கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.