அன்புமணி 
தமிழ்நாடு

பேரவைத் தோ்தல்: விருப்ப மனு அளித்தவா்களிடம் அன்புமணி நோ்காணல்

வருகிற பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல், கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

வருகிற பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல், கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 5 போ் குழு நோ்காணலை நடத்தியது. திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, திருச்சி, வேலூா், ராணிப்பேட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் நடத்தப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அன்புமணி, சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இன்னும் பல கட்சிகள் கூட்டணியில் இணையவுள்ளன. தோ்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, புதன்கிழமை (ஜன.28) கடலூா், பெரம்பலூா், திருவாரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்களிடம் நோ்காணல் நடத்தப்படுகிறது. வருகிற 30-ஆம் தேதி வரை நோ்காணல் நடைபெறவுள்ளது என்று பாமக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம் மறைவுக்கு ஆளுநா் இரங்கல்

சாலை மறியல் வழக்கு: கேரள காங்கிரஸ் எம்.பி.க்கு ரூ.1,000 அபராதம்

இருசக்கர வாகனம் திருடிய 3 போ் கைது

ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் 4.8% சரிவு

அமில வீச்சு வழக்குகளின் நிலை: ஆண்டுவாரியாக விவரங்களைச் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT