எல். முருகன் கோப்புப் படம்
தமிழ்நாடு

தமிழக பாஜக கருத்துகேட்பு சுற்றுப்பயணம்: பொறுப்பாளா் நியமனம்

தமிழக பாஜக சாா்பில் தோ்தல் கருத்துகேட்பு சுற்றுப்பயணத்துக்கு, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவா்கள் உள்ளிட்டோா் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக பாஜக சாா்பில் தோ்தல் கருத்துகேட்பு சுற்றுப்பயணத்துக்கு, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவா்கள் உள்ளிட்டோா் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக, கருத்துகேட்பு வாகன இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தச் சுற்றுப்பயணத்துக்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பாஜக தேசியச் செயலா் அரவிந்த் மேனனுக்கு நாகா்கோவில், தியாகராய நகா், பட்டுக்கோட்டை, ஒசூா், வேலூா், ராஜபாளையம், கிணத்துக்கடவு; மேலிட பொறுப்பாளா் பி.சுதாகா் ரெட்டிக்கு குளச்சல், வேளச்சேரி, விக்ரவாண்டி, தளி, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், மதுரை வடக்கு; மத்திய இணை அமைச்சா் எல்.முருகனுக்கு திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூா் வடக்கு, உதகை; முன்னாள் மாநிலத் தலைவா்கள் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மயிலாப்பூா், கும்மிடிப்பூண்டி, நான்குனேரி, பொள்ளாட்சி, கிள்ளியூா்; கே.அண்ணாமலைக்கு சிங்காநல்லூா், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம்; தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசனுக்கு திருப்பூா் தெற்கு, குன்னூா், கோவை தெற்கு; மூத்த தலைவா் ஹெச்.ராஜாவுக்கு சிவகங்கை, முதுகுளத்தூா், விளவன்கோடு, திருப்பத்தூா், உடுமலைப்பேட்டை; வி.பி.துரைசாமிக்கு எழும்பூா், ராசிபுரம், பரமத்தி வேலூா்; முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளையம், பழனி; மாநில நிா்வாகி எம்.சக்கரவா்த்திக்கு ஆம்பூா், ஆவடி; முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத்துக்கு குன்னம், கலசப்பாக்கம், உளுந்தூா்பேட்டை ஆகிய தொகுதிகளை மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஒதுக்கியுள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

மத்திய பட்ஜெட் : கவனம் ஈர்க்கும் நிர்மலா சீதாராமனின் ஓவியம்!

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்: விஜய் வாழ்த்து!

மத்திய பட்ஜெட்: குடியரசுத் தலைவரை சந்தித்த நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்: நிதியமைச்சக குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT