முன்னாள் முதல்வா் அண்ணாவின் 57-ஆவது நினைவு நாளான பிப். 3-ஆம் தேதி (செவ்வாய்) திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக சென்னை மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முதல்வா் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச் சென்றடையும்.
கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு மற்றும் கட்சியினா் அன்றைய தினம் காலை 7 மணிக்கு காமராஜா் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.