முகப்பு
தமிழ்நாடு

வினை விதைத்தவன் வினை அறுப்பான்... யாரைச் சொல்கிறார் வைகோ?

புதுச்சேரியில் மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தது குறித்து...

Updated On : 3 ஜூலை 2026, 4:48 pm IST
வைகோ - கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரியில் நடைபெறும் தனித்தமிழ் இயக்க விழாவில் பங்கேற்க வந்த வைகோவுக்கு, புதுச்சேரி மதிமுக மாநில அமைப்பாளர் ஹேமா. பாண்டுரங்கம் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ”முத்தமிழ் போற்றும் மூன்று காண்டங்கள் என்ற தலைப்பில் தனித்தமிழ் இயக்க விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். பிரெஞ்சு நாடு இன்றும் புதுச்சேரியை மதிக்கிறது.

தமிழகத்தில் இதுவரை தலைவிரித்தாடிய ஊழல் ஒழிக்கப்பட்டு நேர்மையான ஆட்சியை விஜய் நடத்துகிறார். அவர் கொற்றம் வாழ்க. இப்படியே கொற்றம் நீடிக்கும். பெருச்சாளி ஊழல்தான் திமுக செய்தது” என விமர்சித்தார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், கரூர் விவகாரத்தில் மனசாட்சி இல்லாமல் ஓடி வந்தவர் என விஜய்யை விமர்சித்தீர்களே என்ற கேள்விக்கு, "அன்று போகவில்லை என்று சொன்னேன்- இன்று போகிறார், மனசாட்சி இருக்கிறது என்று சொல்கிறேன்" என்றார்.

திமுகவிலிருந்து மதிமுக விலகியது நிம்மதியாக இருக்கிறது என எம்பி துரை வைகோ கூறியது குறித்த கேள்விக்கு, "லட்சக்கணக்கான தொண்டர்கள் எப்படி நிம்மதியாக உள்ளனர் என்று சொல்கிறார்களோ, அந்த நிம்மதியைதான் திருச்சி எம்பி வெளிப்படுத்தி உள்ளார்" எனத் தெரிவித்தார்.

அதிக முறை உங்களை எம்.பி.யாக வைத்து, அழகு பார்த்தது திமுக என்ற கேள்விக்கு, "அதைவிட லட்சம் வரை அண்ணாவையும் இயக்கத்தையும் நாடாளுமன்றத்தில் தூக்கி நிறுத்தியவன்நான்" என்றார்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது தொடர்பாக கேட்டதற்கு, "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்றார்.

Regarding the remarks made by MDMK General Secretary Vaiko in Puducherry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments