உதயநிதி ஸ்டாலினுடன் இலங்கை எம்பி சந்திப்பு!
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இலங்கை எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துப் பேசினார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இலங்கை எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துப் பேசினார்.
தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்- திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தார். போருக்குப் பிந்தைய சூழலில் ஈழத்தமிழர்கள் சந்திக்கும் நெருக்கடிகளை எதிர்க்கட்சித் தலைவருக்கு அவர் விரிவாக விளக்கினார்.
கட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, கடந்த டிசம்பர் மாதம் அவரைச் சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்ததையும், உடனடியாக ஒன்றிய அரசுக்கு கட்சித் தலைவர் கடிதம் எழுதி வலியுறுத்தியதையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.
Advertisement
Advertisement
தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் உரிமைகளுக்காக பேரறிஞர் அண்ணா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து குரல்கொடுத்துத் துணை நின்று வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை உலகத்தமிழர்கள் அறிவார்கள். அந்த வகையில், ஈழத்தமிழர் நலன் சார்ந்து அவர் கூறியவற்றை, கட்சித் தலைவரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் செயல்படுவோம் என்று அவருக்கு உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது, நம் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலை வழங்கி, 'இலங்கை தி.மு.க.' குறித்து எழுத்தாளர் ஷோபாசக்தி எழுதிய கட்டுரையும் அந்த நூலில் இடம் பெற்றிருப்பதை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
Sri Lankan MP Gajendrakumar Ponnambalam met and held discussions with Tamil Nadu Leader of the Opposition Udhayanidhi Stalin.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.