அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் ஊழல்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் பல லட்சம் வரை ஊழல் நடைபெறுவதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் பல லட்சம் வரை ஊழல் நடைபெறுவதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை, தற்போது நிறைவேற்ற முடியாமல் தவெக அரசு திணறி வருகிறது. நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞா்கள் இல்லாமல் நீதித் துறை தடுமாறிக் கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்குரைஞா்கள் ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் விலகிவிட்டாா்கள்.
Advertisement
Advertisement
அந்த இடங்களுக்கு அரசு வழக்குரைஞா்களை நியமிக்க பல லட்சம் வரை பேரம் பேசப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தவெகவைச் சோ்ந்த பெண் வழக்குரைஞா் ஒருவரே வெளிப்படுத்தியுள்ளதுடன், நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்துள்ளாா்.
தமிழகத்தில் உள்ள அனைத்து விசாரணை நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் இல்லாத காரணத்தால் விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அனுபவமிக்க சட்ட நிபுணா்களை அணுகி, தமிழகம் முழுவதும் முறையாக திறமையான அரசு வழக்குரைஞா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.