முகப்பு
தமிழ்நாடு

ஏமாற்றம்! தன்னிச்சையாக ஊதிய உயர்வு: டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் கண்டனம்!

டாஸ்மாக் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல என்று டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் கண்டனம்.

Updated On : 7 ஜூலை 2026, 9:34 pm IST
பகிர்:

டாஸ்மாக் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல என்று டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் இன்று (ஜூலை 7) தெரிவித்தார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு கடந்தாண்டுகளில் ரூ. 500, ரூ. 750 மற்றும் 5-6 ஆண்டுகளுக்கு முன்னதாக, ரூ. 2000 ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது. பாட்டிலுக்கு ரூ.10 பிரச்சினைக்கு தீர்வு காண ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு வரும் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

ஊதிய உயர்வால் அரசுக்கு ரூ.110.74 கோடி கூடுதல் செலவாகும். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலான நேரத்தில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.பி. விலையில் மது விற்பனை செய்வதற்கும், முறைகேட்டை தவிர்க்கவும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மது விலையை உயர்த்தி வருவாயை பெருக்குவது அரசின் நோக்கமல்ல. மதுபானங்களின் விலை உயராது” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல என்று டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் இன்று டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஊதியத்தில் 25 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை இக்கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் 23 ஆண்டு காலமாக தொடர்ந்து பணிபுரிந்து ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் என்ற பெயரில் மிக குறைந்த ஊதியமே வழங்கப்படுவதும், அரசுக்கு சொந்தமான இதர விற்பனை பிரிவுகளான அமுதம் அங்காடிகள், நியாயவிலை கடைகள், ஆவின் பாலகங்கள், கோஆப்டெக்ஸ் துணி கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன் பஞ்சபடியும் கூடிய காலமுறை ஊதியம் வழங்கப்படுவதும் அரசு தனது நிறுவன ஊழியர்களிடையே மாற்றந்தாய் மனபான்மையோடு அணுகும் போக்கு சரியல்ல என்பதை முந்தைய ஆட்சிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் தொகுப்பூதியத்தில் சிறு உயர்வை அவ்வப்போது அறிவித்தார்கள். அதனை பின்பற்றியே தவெக அரசும் தொகுப்பூதியத்தை உயர்த்தியுள்ளது.

இது ஊழியர்களின் வாழ்க்கை செலவினங்களை எந்தவகையிலும் ஈடுசெய்ய உதவாது என்பதை அரசு உணர வேண்டும். இந்த ஊதிய உயர்வைக்கூட ஊழியர்களின் பணி நிலைமையை கருத்தில் கொண்டு அறிவித்தாக தெரியவில்லை.

அமைச்சரின் பேச்சில் கூடுதல் விலை வைத்து விற்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகவே உள்ளது. அரசின் இதர நிறுவனங்களில் 23 ஆண்டு பணி என்பது பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு, சம்பளத்தில் உயர்வு, இதர பணப்பயன்கள் பெற்று வருவதை கருத்தில் கொள்ளாமல் முந்தைய ஆட்சியாளர்களை போலவே நவீன கொத்தடிமை முறையை இந்த அரசும் தொடர்வது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

அரசு, இந்த தொகுப்பூதிய உயர்வை மறுபரிசீலனை செய்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை சம்பளத்துடன்கூடி காலமுறை ஊதியம் வழங்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்துகிறது.

summary

The TASMAC Employees' State Federation has condemned the unilateral announcement of a wage hike without holding discussions with the employees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments