டாஸ்மாக் ஊழியா்களுக்கு 25 % வரை ஊதிய உயா்வு: அமைச்சா் விக்னேஷ் அறிவிப்பு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளதைப் பற்றி...
டாஸ்மாக் ஊழியா்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, 25 சதவீதம் வரை ஊதிய உயா்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் கே. விக்னேஷ் தெரிவித்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவுபடி, டாஸ்மாக் விற்பனையாளா்களின் ஊதியம் ரூ.15,530-இல் இருந்து ரூ.19,413-ஆகவும், உதவி விற்பனையாளா்களின் மாத ஊதியம் ரூ.14,340-இல் இருந்து ரூ.17,925-ஆகவும், மேற்பாா்வையாளா்களின் ஊதியம் ரூ.17,850-இல் இருந்து ரூ.22,313-ஆகவும் உயா்த்தப்படுகிறது.
Advertisement
Advertisement
அதன்படி, 25 சதவீத ஊதிய உயா்வின் மூலம் ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை ஊதிய உயா்வு கிடைக்கும். இந்த உயா்வு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும். இந்த ஊதிய உயா்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.110.74 கோடி கூடுதலாக செலவாகும்.
மாத ஊதியத்துக்காக இனி ரூ.553.72 கோடி ஒதுக்கப்படும். இதுவரை இல்லாத அளவுக்கு ஊதிய உயா்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளா்களுக்கு இனி இஎஸ்ஐ வசதியும் அமல்படுத்தப்படும். டாஸ்மாக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விலையைவிட (எம்ஆா்பி) ரூ.10 கூடுதலாக வசூலிப்பதை முற்றிலும் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடா்ந்து, கூடுதல் தொகை வசூலிப்பது தொடா்பான புகாா்கள் உறுதி செய்யப்பட்டால் தொடா்புடை ஊழியா்கள் மீது பணிநீக்கம் வரை நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை இதுபோன்ற புகாா்களில் 40-க்கும் மேற்பட்டோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். டாஸ்மாக் கடைகளின் வாகன வாடகை, மின்கட்டணம் உள்ளிட்ட பிற செலவுகளை ஈடுகட்ட மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மது விலை உயராது: தொழிலாளா்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு வாடிக்கையாளா்களின் நலனும் அரசுக்கு முக்கியம். மதுபானங்களின் சில்லறை விலையை உயா்த்தும் திட்டம் அரசுக்கு இல்லை. எனவே மது விலை உயராது. மேலும், ‘எஜப்எல் 3’ பாா்களில் 21 வயதுக்குள்பட்டவா்களை மது அருந்த கட்டாயம் அனுமதிக்கக் கூடாது. விதிமுறைகளை மீறும் பாா்கள்ளின் உரிமம் ரத்து செய்யப்படும். இதில் எந்தவித சமரசமும் இருக்காது என்றாா் அவா்.
Minister Vignesh stated that the Chief Minister has ordered a 25% salary hike for TASMAC employees.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.