FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்

எதிர்க்கட்சி தூண்டுதலின்பேரில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதாக அமைச்சர் விக்னேஷ் கருத்து...

Updated On : 12 ஜூலை 2026, 5:26 pm IST
அமைச்சர் விக்னேஷ் - எக்ஸ்
பகிர்:

எதிர்க்கட்சி தூண்டுதலின்பேரில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதாகவும் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம் எனவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் இன்று (ஜூலை 12) தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

தற்போதுள்ள நிதிச் சூழலை புரிந்துகொண்டு அரசின் சீரமைப்பு முயற்சிக்கு தொழிலாளர் வரவேற்பு அளிக்கின்றனர். டாஸ்மாக் தொழிலாளர்களுடன் நேரடியாகப் பேசினேன். தொழிலாளர்கள் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

பின்விளைவுகளை ஏற்படுத்தும் போராட்டங்களை கைவிட்டு அரசுக்கு தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். ஏற்கனவே சம்பள உயர்வு மற்றும் இ.எஸ்.ஐ. உள்ளிட்ட பல முக்கிய முன்னெடுப்புகளைத் தொழிலாளர்களுக்காக எடுத்திருக்கிறோம்.

டாஸ்மாக் தொழிலாளர்களில் நலனை கருத்தில்கொண்டு மருத்துவ காப்பீடு வசதியை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் பேசினார்.

summary

TASMAC employees protest at the instigation of the opposition: Minister Vignesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments