முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்

அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தியிருப்பது பற்றி...

Updated On : 7 ஜூலை 2026, 10:26 am IST
திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு - X | Keerthana
பகிர்:

அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது என்று முதல்வர் அலுவலகம் அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, வகுப்பறைக்குள் சென்ற அமைச்சர் கீர்த்தனா அங்கிருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளைக் கேட்டார். அப்போது அவரின் ஆங்கிலக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மாணவிகள் சிலர் திணறினர்.

Advertisement

Advertisement

அப்போது, `முதல் பெஞ்ச் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்' என்று அமைச்சர் கீர்த்தனா பேசினார். இது தொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, பேசுபொருள் ஆகியுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

”அரசு பள்ளிகள், அலுவலகங்களுக்கு சென்று தேவையில்லாத ஆய்வுகளை செய்ய வேண்டாம் என்று முதல்வர் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், பணியாளர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளையும் சீரமைக்க வேண்டியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை, போதிய செவிலியர்கள் இல்லை. அதையெல்லாம் சரிசெய்ய வேண்டியுள்ளது.

ஆளுநர் ஆய்வு செய்வதில் எந்த பயனும் இல்லை. அவரால் பொதுப்பணித்துறை உள்பட யாருக்கும் உத்தரவு போட முடியாது. நிதி ஒதுக்கவும் முடியாது.” எனத் தெரிவித்தார்.

மேலும், வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த புகாருக்கு பதிலளித்த அமைச்சர்,

”மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதுவரை இல்லாத வகையில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் முறையாக விண்ணப்பங்கள் பெற்று நேற்றுமுதல் தான் ஆணைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. வழக்கறிஞர்கள் நியமனங்கள் 100 சதவிகிதம் நேர்மையாக நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 5,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து முடிவெடுக்கிறார்கள். யாரேனும் பணம் வாங்கினால் புகார் அளிக்கலாம்.” எனத் தெரிவித்தார்.

summary

Ministers should not undertake inspections unnecessarily! – Chief Minister's Office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments