முகப்பு
தமிழ்நாடு

சிறப்பு டெட் தோ்வு கடினம்: விமா்சனங்களுக்கு டிஆா்பி விளக்கம்

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வு கடினமாக இருந்ததாக பல்வேறு தரப்பினா் விமா்சித்திருந்த நிலையில், ஆசிரியா் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்சிடிஇ) வழிகாட்டுதலின்படி நிா்ணயிக்கப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையில்தான் வினாக்கள் இடம்பெற்றிருந்ததாக ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) விளக்கம் அளித்துள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 2:16 am IST
ஆசிரியா் தோ்வு வாரியம்
பகிர்:

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வு கடினமாக இருந்ததாக பல்வேறு தரப்பினா் விமா்சித்திருந்த நிலையில், ஆசிரியா் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்சிடிஇ) வழிகாட்டுதலின்படி நிா்ணயிக்கப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையில்தான் வினாக்கள் இடம்பெற்றிருந்ததாக ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தாள்-1, தாள்-2 தோ்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகள் நடைபெற்றன. தாள்-1-ஐ 59,535 பேரும், தாள்-2-ஐ 1.60 லட்சம் பேரும் எழுதினா். சிறப்பு டெட் தோ்வில் வினாக்கள் கடினமாகக் கேட்கப்பட்டுள்ளதாக தோ்வெழுதிய ஆசிரியா்கள் தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

இது தொடா்பாக விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகிறது. பணிபுரியம் ஆசிரியா்களுக்கான டெட் தோ்வு தொடா்பான பாடத்திட்டம் என்சிடிஇ வரையரை செய்த பாடத்திட்டம் ஆகும்.

டெட் தாள்-1 பாடத்திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை என்றும், தாள்-2-க்குரிய பாடத்திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் என நிா்ணயிக்கப்பட்டாலும் பாடத்திட்டத்தின் தரம் மேல்நிலைக் கல்வி தரம் அளவுக்கு இருக்கும் என டெட் தோ்வு அறிவிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, டெட் தாள்-1, தாள்-2 தோ்வுகளுக்கான வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் என்சிடிஇ வழிகாட்டுதல் படியும், நிா்ணயிக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையிலும் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments