FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வாட்ஸ்ஆப் மூலமாக புறநோயாளிகள் பிரிவு சேவைக்கான முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்...

நலம்ஏஐ செயலி - X | arunraj
பகிர்:

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வாட்ஸ்ஆப் மூலமாக புறநோயாளிகள் பிரிவு சேவைக்கான முன்பதிவு செய்யும் வசதியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஜூலை 8) தொடக்கிவைத்தார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கான புறநோயாளிகள் பிரிவுக்கு மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை, படிப்படியாக மற்ற துறைகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

அதேபோல தமிழகம் முழுவதும் 22 மாவட்டங்களில் குறிப்பிட்ட பிரிவுகளில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் "நலம்AI" என்ற பெயரில் வாட்ஸ்ஆப் சாட்பாட் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக இந்த வாட்ஸ்ஆப் மூலமாகவே புறநோயாளிகள் பிரிவுக்கு முன்பதிவு செய்துகொள்ள முடியும். இதற்கு வாட்ஸ்ஆப்பில் 9619222999 என்ற எண்ணுக்கு 'hi' என்று அனுப்பினால் அதில் கேட்கும் விவரங்களுக்கு பதில் அளித்தால் மருத்துவ சேவைக்கு முன்பதிவு செய்யப்படும். மருந்துச் சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை வாட்ஸ்ஆப் மூலமாகவும் பெறலாம்.

அதேபோல அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைக்கு ஆதார் கட்டாயம் என்ற புதிய நடைமுறையால் மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், 'ஆதார் இல்லையென்றால் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை மறுக்கப்படாது' என்று கூறினார். அதேபோல இந்த சாட்பாட் சேவையிலும் ஆதார் கேட்கப்படும். ஆதார் இல்லையென்றாலும் மருத்துவ சேவை வழங்கப்படும்.

மை ஹாஸ்பிடல் செயலி

அரசு மருத்துவமனைகளில் கழிப்பறைகள், மற்ற இடங்கள் சுத்தமாக இல்லையென்றால் இந்த செயலியில் உள்ள க்யூஆர் குறியீடு மூலமாக தெரிவிக்கலாம். உடனடியாக சரிசெய்யப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

summary

Book appointments for treatment at the government hospital via WhatsApp

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments