நிலை நிலைமை மோசமடைய நலத்திட்டங்கள் காரணமா? நிதித்துறை விளக்கம்!
தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமடைய நலத்திட்டங்கள் காரணமா? நலத்திட்டங்கள் நிறுத்தப்படுமா? என்ற கேள்விக்கு நிதித்துறை செயலர் பதில்.
தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமடைய நலத்திட்டங்கள் காரணமா? என்ற கேள்விக்கு நிதித் துறை செயலாளர் சித்திக் ஐஏஎஸ் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 16) வெள்ளை அறிக்கை வெளியிட்டார். வெள்ளை அறிக்கை வெளியிட்டு அது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.
பின்னர் நிதியமைச்சர் மரிய வில்சன், நிதித் துறை செயலாளர் சித்திக் ஐஏஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
Advertisement
Advertisement
அப்போது, கடன் சுமை அதிகரிக்க நலத்திட்டங்கள் காரணமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சித்திக் ஐஏஎஸ்,
''தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏற்கெனவே உள்ள திட்டங்களை நிறைவேற்றவே கூடுதல் செலவாகிறது. நல்ல திட்டங்கள் நிச்சயம் நிறுத்தப்படாது.
தற்போதுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வருவாய் திரட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு நிதியை உருவாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
யாரையும் குறை சொல்ல இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. தற்போதைய நிலைமையை தெரிவிக்கவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுக்கு ரூ. 100 வருவாய் கிடைத்தால், ரூ. 145 செலவாகிறது. ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 45 ரூபாய் பற்றாக்குறையாக உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.