ஜூன் 19: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை(ஜூன் 19) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளது குறித்து...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச காரணங்களால் சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.
கடந்த ஜூன் 16-இல் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,480-க்கும், புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,12,240-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
தொடா்ந்து, வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,950-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,11,600-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.380 குறைந்து ரூ.13,570-க்கும், பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கும் விற்பனையாகிறது.
அதன்படி, 4 நாள்களில் மட்டும் பவுன் மொத்தம் ரூ.4,000 குறைந்துள்ளது.
அதேபோல், வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 15 குறைந்து ஒரு கிராம் ரூ. 255-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 15,000 குறைந்து ரூ. 2.550 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Chennai present to you today gold rate in Chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.