ஹூண்டாய் வென்யூ 
வணிகம்

புதிய அம்சங்களுடன் ஹூண்டாய் வென்யூ அறிமுகம்!

புதிய ஸ்டைலிங் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் ஹூண்டாய் வென்யூ அறிமுகம்..

இணையதளச் செய்திப் பிரிவு

பல்வேறு புதிய அம்சங்களுடன் ஹூண்டாய் வென்யூ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வென்யூ கார் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்டைலிங், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட இன்ஜின் லைன்அப் ஆகியவை இதில் அடங்கும்.

வென்யூவின் விலை ரூ.7.90 லட்சம் முதல் ரூ.15.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் என் லைன் எடிசன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் காரில் 1.2லிட்டர் என்.ஏ. பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 83 எச்.பி பவரையும், 114 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

மேலும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியண்டும் கொண்ட 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் வேரியண்டில் கிடைக்கம்.

இவை தவிர 1.5 லிட்டர் டீசல் வேரியண்டும் உள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 116 எச்.பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். தோற்றத்தில் பொலிவுபடுத்தப்பட்டுள்ள இந்த காரில் அகலமான கருப்பு குரோம் கிரில்கள், ஸ்பிளிட் ஹெட்லாம்ப், சி வடிவ எல்இடி, டிஆர்எல்கள், பின்புறல் எல்இடி லைட் பார், 12.3 அங்கு டிஸ்பிளே, லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

எச்எக்ஸ் 2, எச்எக்ஸ்-4, எச்எக்ஸ்-6, எச்எக்ஸ்-7, எச்எக்ஸ்-8 மற்றும் எச்எக்ஸ்-10 ஆகிய வேரியண்ட்டுகள் உள்ளன. தற்போது டீசல் என்ஜின் வேரியண்டில் எச்எக்ஸ்-2, எச்எக்ஸ்-10 ஆகியன விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

The Hyundai Venue has been launched in India with various new features.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாரணாசியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரிலையன்ஸ் உடன் இணையும் அஜித் குமார்!

உடம்பை வளர்த்தேன்... மஞ்சு வாரியர்!

இந்திய - அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் உரையாடல்!

காற்றே பூங்காற்றே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT