முகப்பு
வணிகம்

புதிய ஆடி எஸ்கியூ8: மேம்பட்ட அம்சங்களுடன் மார்ச் 17ல் வெளியீடு!

ஆடி எஸ்கியூ 8-க்கான முன்பதிவு தொடக்கம்..

Updated On : 11 மார்ச், 2026 at 12:05 PM
எஸ்.கியூ.8 எஸ்யுவி
பகிர்:

ஆடம்பர கார் நிறுவனமான ஆடி, தனது புதிய எஸ்.கியூ.8 எஸ்யுவி மாடலை மார்ச் 17ல் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆடி எஸ்கியூ முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் மை ஆடி என்ற வலைத்தளத்தில் ரூ. 5 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இது கியூ8 மற்றும் ஆர்.எஸ்.கியூ.8 மாடல்களுக்கு இடைப்பட்ட பதிப்பாக எஸ்.கியூ8 இருக்கும் எனக் கூறப்படுகிறது.

எஸ்.கியூ8ல் 4.0 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ்டு வி8 இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 507 எச்.பி. பவரையும், 770 எம்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

ஸ்டாண்டர்டு பதிப்பில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும். 8- ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இதில் இடம் பெற்றுள்ளது. கூபே எஸ்யுவி வடிவமைப்பில் உருவாகியுள்ள இந்த மாடலில் ஹனி-கோம் வடிவ கிரில், மாற்றியமைக்கப்பட்ட ஹெட்லாம்ப் மற்றும் பம்பர் வடிவமைப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள் அமைப்பில் பெரிய கண்ணாடியுடன், பிரிமியம் கேபின், 12.3 இன்ச் தொடுதிரை. டிஜிட்டல் இன்ஸ்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூப், ஹெட்-அப் டிஸ்பிளே, அட்ஜஸ்டபிள் சீட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களாக ஏர்பேக், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டிராக் ஷன் கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார்கள், டயர் காற்றழுத்த கண்காணிப்பு அமைப்பு உள்பட பல வசதிகள் இடம்பெறவுள்ளது.

summary

Audi India has opened bookings for the performance-focused SQ8 SUV ahead of its March 17 launch. The V8-powered luxury SUV sits between the Q8 and RS Q8 in the brand's lineup.

முழு கட்டுரையைப் படிக்க →