விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எதிர்வினையாற்றியது குறித்து சிபிஐ கருத்து...
சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசியதும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எதிர்வினையாற்றியதும் ஏற்புடையதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் இன்று (ஜூன் 24) தெரிவித்தார்.
இது தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களுடன் மு. வீரபாண்டியன் பேசியதாவது:
''யாரையும் யாரும் தாழ்வுபாராட்டக் கூடாது, உடல் மொழியாலும் காயப்படுத்தக் கூடாது.
Advertisement
Advertisement
நேர் எதிரான கருத்துகள் இருந்தாலும், பண்பு தவறிய வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. அதில்தான் ஜனநாயகத்தின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது.
யார் தவறு செய்தாலும் அது தவறுதான். சட்டப்பேரவையில் தந்தையை தேடுகிறேன் என முதல்வர் கூறியது ஏற்புடையதல்ல; அதற்கு பதில் அளிக்கும் விதமாக மறுமொழியில் உதயநிதி பேசியதும் ஏற்புடையதல்ல. இது நமது பண்புகளுக்கு மாறானது.
மக்கள் பிரச்னைகள் ஏராளம் உள்ளன. இது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
மாநில அரசுதான் மத்திய அரசுக்கு அதிகாரத்தை கொடுக்கிறது. கொடுப்பதற்கு மத்திய அரசு எஜமானர் அல்ல; கெஞ்சிப் பெறுவதற்கு மாநில அரசு வேலை ஆள்கள் அல்ல.
நிர்வாகத்தில் பிரதமருடன், மத்திய அமைச்சகத்துடன் இணக்கமாக செயல்படுவது என்பது வேறு; மாநிலத்தின் கொள்கைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பது வேறு.
எந்த நேரத்திலும் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் உரிமைகளுக்காக போராட வேண்டும். அத்தகைய போராட்டங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்'' எனப் பேசினார்.
Vijay and Udhayanidhi should focus on public issues Mu. Veerapandian
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.