ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்!
அதிமுக மகளிரணி கூட்டம் குறித்த அறிவிப்பு பற்றி....
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 1 ஆம் தேதி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மகளிர் அணி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியில் மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்தும் கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு குறித்தும் இதில் விவாதிகப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்தும் கழக வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு குறித்தும், "கழக மகளிர் அணி மாநில நிர்வாகிகள்; மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்கள்; கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டக் கழக இணைச் செயலாளர், மாவட்டக் கழக துணைச் செயலாளர்; தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் கழக செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்" சென்னை இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 1.7.2026 - புதன் கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார். இக்கூட்டத்தில் மூத்த தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
ஆகவே, மேற்கண்ட பொறுப்புகளில் பணியாற்றி வரும் மகளிர் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADMK women wing meeting on july 1 in chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.