மத்திய அரசே குதிரை பேரம் செய்துள்ளது: செங்கோட்டையன்
மத்திய அரசும் குதிரை பேரம் செய்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குறித்து...
மத்திய அரசும் குதிரை பேரம் செய்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பாஜக தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "மத்திய (பாஜக) அரசே குதிரை பேரம் செய்துள்ளது. மகாராஷ்டிரத்தில் என்ன நடந்தது? ஓர் அரசையே திருப்பிப் போட்டனர். அதற்கு பெயர் என்ன?
Advertisement
Advertisement
ஓர் இயக்கத்தில் நல்ல நடைமுறையைப் பின்பற்றி மற்றவர்கள் வருவதை வரவேற்க வேண்டுமே தவிர வேறொன்றுமில்லை.
நாங்கள் (அதிமுகவில் இருந்தபோது) எதிர்க்கட்சியாக இருந்தபோது மதிமுக கம்பம் ராமகிருஷ்ணன், திமுகவில் சேர்ந்தார். அதேபோல, அனிதா ராதாகிருஷ்ணனும் அதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்தார்.
இவர்கள் இருவருக்கும் திமுகவில் சீட்டுகள் கொடுத்தனர். அதற்கு பெயர் என்ன?
ஓர் இயக்கம் நல்ல முறையில் பணியாற்றுகிறது. தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறப்பான முறையில் இந்தப் பணிகள் அமையப் போகிறது என விரும்பினால், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வரலாம். இதுதான் நம்முடைய ஜனநாயக உரிமை. இந்த உரிமையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் ராஜிநாமா செய்கின்றனர்.
எங்களைப் பொருத்தவரையில் 120 பேர் இருக்கிறோம். எங்களுக்கு எந்த வியூகமும் கிடையாது. குதிரை பேரம் என்பதெல்லாம் வார்த்தை ஜாலம்தான்.
நானும் 6 மாதங்களுக்குமுன் ராஜிநாமா செய்துவிட்டு, இங்கு சேர்ந்தேன்; இன்று அமைச்சர் ஆகிவிட்டேன்" என்று தெரிவித்தார்.
The Central Government itself has engaged in horse-trading, says Minister KA Sengottaiyan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.