திமுக ஆதரவுடன் முதல்வராகலாம் என்றது யார்? செங்கோட்டையன் கேள்வி
திமுகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராக அவர் (எடப்பாடி பழனிசாமி) விரும்பியதாக அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
திமுகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராக அவர் (எடப்பாடி பழனிசாமி) விரும்பியதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தவெகவில் மற்ற கட்சியினர் இணைவது குறித்து செய்தியாளர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, தவெகவில் குதிரை பேரம் நடப்பதாக சிலர் கூறுகின்றனர். முதன்முதலில் குதிரை பேரம் பேசியது யார்?
திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு முதல்வராகலாம் என்று சொன்னது யார்? தமிழ்நாட்டின் வரலாற்றில் அதிமுகவுக்கும் திமுகவுக்கு கூட்டணி இதுவரையில் நடந்திருக்கிறதா?
Advertisement
Advertisement
ஜெயலலிதா மீது வழக்கு போட்டு, சிறையிலடைத்தவர்களுடன் இணைந்து முதல்வராக வேண்டும் என்று சொல்பவர் அதிமுகவை சேர்ந்தவர்தானா என்பதுதான் என்னுடைய கேள்வி.
யார் குதிரை பேரம் நடத்தினார்கள் என்பதுதான் இன்று தமிழக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. சிலர் ராஜிநாமா செய்துவிட்டு, இங்கு (தவெக) இணைகின்றனர். அவர்கள் ராஜிநாமா செய்வதற்குக் காரணம் என்னவென்றால், திமுகவுடன் அதிமுக கூட்டணி வைக்கவிருப்பதாகக் கூறப்பட்டதால்தான். இது தமிழ்நாட்டில் இதுவரையிலும் நடைபெறாத ஒன்று.
எங்களைப் பொருத்தவரை, எங்களுக்கு குதிரை பேரம் தேவையில்லை. ஏனெனில், தனித்து நின்று வெற்றி பெற்ற ஓர் இயக்கம், இரண்டே ஆண்டுகளில் பண நாயகத்தை முறியடித்து, ஜனநாயகத்தை உருவாக்கியிருக்கிற மக்கள் இயக்கம்.
இந்தியாவில் எந்தவோர் இயக்கத்துக்கும் இதுபோன்ற வரலாறு இல்லை.
அதிமுகவின் இரண்டாம் கட்டப் பொறுப்பாளர்கள் இனியும் அங்கு நீடித்திருப்பது சரியாக இருக்காது. ஏனெனில், திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிற ஒரு பொதுச் செயலாளரை நம்பி, இந்த இயக்கத்தில் இருக்கக் கூடாது என முடிவு செய்திருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
Minister K.A. Sengottaiyan states that EPS desired to form an alliance with the DMK and become Chief Minister.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.