குதிரை பேரம் நடத்தியது யார் என்று நாடறியும்! தவெக அதைச் செய்யவில்லை! செங்கோட்டையன்
குதிரை பேரம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில்
தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை குதிரை பேரம் நடத்தவில்லை என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"தவெகவைப் பொருத்தவரை குதிரை பேரம் எதுவும் நடைபெறவில்லை. குதிரை பேரம் நடத்தியவர்கள் யார் என்பதை நாடு அறியும். திமுக ஆதரவுடன் நான் முதலமைச்சர் ஆவேன் என்று சொன்னது யார் ? அதை நீங்கள் தெரிந்து கொண்டு அவர்களிடம் பதில் கேட்டால் சரியாக இருக்கும்.
Advertisement
Advertisement
நானே ராஜிநாமா செய்துவிட்டுதான் தவெகவில் இணைந்தேன். அதனால் ராஜிநாமா செய்தவர்களின் முடிவு அவர்களுடைய ஜனநாயக உரிமை.
6 மாத காலத்திற்கு எதுவும் விமர்சிக்க மாட்டோம் என்று எதிர்க்கட்சி சொன்னார்களா, இல்லையா? நாங்களும் பொறுத்திருந்துதான் ஒவ்வொன்றாக செய்ய முடியும். எங்களுக்கும் ஒரு அவகாசம் தர வேண்டும். குற்றங்கள் நடைபெறும்போது உடனடியாக முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காவல் துறையின் மூலமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நான் யாரையும் அதிமுகவில் இருந்து தவெகவில் சேர்க்கவில்லை. இங்கு வந்த பிறகு என்னைச் சந்திக்கின்றனர்" என்று பேசினார்.
TVK did not do horse trading: Minister sengottaiyan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.