FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பழனிக்கு மொட்டை போட்டது யார் என்று காலப்போக்கில் தெரியும்! அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி....

Updated On : 17 ஜூலை 2026, 5:10 pm IST
அமைச்சர் செங்கோட்டையன்.
பகிர்:

பழனிக்கு மொட்டை போட்டது யார் என்று காலப்போக்கில் தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், டெண்டர்கள் கூடுதலாக விடப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதலமைச்சர் பதவியில் இருக்கும் வரை எந்தவிதமான தவறுகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயலாற்றி வருகிறார். நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கான டெண்டர்கள் அடுத்த ஆண்டு வரை நடைமுறையில் உள்ளன.

எனவே, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காரணமில்லாமல் எந்த ஒரு டெண்டரையும் ரத்து செய்ய முடியாது. கூடுதல் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே ரத்து செய்ய முடியும். தற்போது முதல்வரின் நேரடி கண்காணிப்பில், தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் தான் சில டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தின்படியே ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என்கிற கருத்து குறித்துக் கேட்கிறீர்கள் .

Advertisement

Advertisement

அரசு என்ன கட்டணத்தை நிர்ணயிக்கிறதோ, அதன்படி செயல்படுகிறோம் என்று தனியார் தரப்பு கூறுவது, அரசு சரியான வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதையே காட்டுகிறது. சமூகத்தில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, போதைப்பொருள் புழக்கம் முற்றிலும் குறைக்கப்படும்.

மேலும், எடப்பாடி பழனிசாமி குறித்து, பழனிக்குச் சென்று மொட்டை போட்டவர் யார் என்பது குறித்த உண்மை, காலப்போக்கில் அனைவருக்கும் தெரியவரும், என்று தெரிவித்தார்.

summary

Time will tell who shaved Palani's head, stated Minister Sengottaiyan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments