வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதி
அதிமுக எம்எல்ஏக்களின் தொடர் ராஜிநாமா குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்...
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, தொடர்ந்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்கு இழைக்கும் துரோகம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
Advertisement
Advertisement
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுகவில் 4 எம்எல்ஏக்களின் ராஜிநாமாவைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தொடர்ந்து இன்று கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இருவரும் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை திருச்சி கிழக்கு தொகுதி சேர்த்து 7 ஆக உயர்ந்துள்ளது.
Washing Machine Politics; Buying MLAs is a Betrayal of the People: Udhayanidhi stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.