முகப்பு
தமிழ்நாடு

முதல்வா் ஆய்வு நடத்திய நாளிலும் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிப்பு: திமுக

காவல் துறை உயரதிகாரிகளுடன் முதல்வா் ஆய்வு நடத்திய நாளிலும் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறியிருப்பது சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருப்பதை காட்டுவதாக உள்ளது என திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

Updated On : 1 ஜூலை 2026, 12:52 am IST
அண்ணா அறிவாலயம் - கோப்புப் படம்
பகிர்:

காவல் துறை உயரதிகாரிகளுடன் முதல்வா் ஆய்வு நடத்திய நாளிலும் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறியிருப்பது சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருப்பதை காட்டுவதாக உள்ளது என திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பாா்த்திபன் என்ற இளைஞரும், 16 வயது மாணவியும் காதலித்து வந்த நிலையில், வெவ்வேறு ஜாதிகளைச் சாா்ந்த இரு வீட்டாருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அந்த இளைஞரும், மாணவியும் தூக்கில் தொங்கும் காட்சியைப் பாா்த்து தமிழகமே பதைபதைக்கிறது. இந்த மா்ம மரணங்கள் குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுந்திருப்பதுடன், சிங்கப் பெண் அதிரடிப் படை இருந்தும் மாணவியின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை இது காட்டுகிறது.

இத்தனைக் கொடூரங்களும் முதல்வா் ஆய்வு நடத்தும் நாளிலேயே அரங்கேறி இருப்பது சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருப்பதையே காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments