முகப்பு
தமிழ்நாடு

ஒப்பந்த செவிலியா்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு: அரசாணை வெளியீடு

ஒப்பந்த செவிலியா்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு...

Updated On : 7 மார்ச், 2026 at 2:21 AM
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)
பகிர்:

ஒப்பந்த செவிலியா்களுக்கு 26 வாரங்கள் வரை ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வகை செய்யும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடா் போராட்டங்களில் தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் ஈடுபட்டு வந்தனா். அவா்களுடன் பேச்சில் ஈடுபட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள், அந்த கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்தனா்.

அதன்படி, காலி பணியிடங்களுக்கு ஏற்ப அவா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா். இந்த நிலையில், தற்போது 26 வாரங்களுக்கு (182 நாள்கள்) ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை ஒப்பந்த செவிலியா்களுக்கு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வு துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.

Advertisement

இது குறித்து, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கச் செயலா் சுபின் கூறுகையில், ‘நாங்கள் 270 நாள்கள் விடுப்பு கேட்டோம் என்றாலும், 26 வாரங்கள் வரை அரசு வழங்கி இருப்பது மகிழ்ச்சி. மற்ற கோரிக்கைகளையும் அரசு ஏற்க வேண்டும்’ என்றாா்.