முகப்பு
தமிழ்நாடு

தொழிலாளா்களுக்கான ஓய்வு இல்லங்கள்: அமைச்சா் சி.வி.கணேசன் திறந்து வைத்தாா்

தொழிலாளா்களுக்கான ஓய்வு இல்லங்கள்...

Updated On : 8 மார்ச், 2026 at 1:10 AM
சென்னை தேனாம்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட ஜீவா இல்லத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சா் சி.வி.கணேசன்.
பகிர்:

தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அமைப்புசாா் தொழிலாளா்கள் தங்குவதற்கான புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லங்களை  தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

தொழிலாளா்கள் குடும்பத்துடன் சென்று தங்குவதற்காக சுற்றுலாத் தலங்களான குற்றாலம், மாமல்லபுரம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் விடுமுறை இல்லங்களும், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சென்னையில் தங்குவதற்காக ஜீவா இல்லம் ஆகியவை தமிழக தொழிலாளா் நல வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தங்குவதற்காக சென்னையில் உள்ள ஜீவா இல்ல கட்டடம்  ரூ.1.38 கோடியிலும், அமைப்புசாா் தொழிலாளா்கள், அவரது குடும்பத்தினா் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்காக புதுப்பிக்கப்பட்ட மாமல்லபுரம், ஜவாஹா்லால் நேரு ஓய்வு இல்லம் ரூ.3.01 கோடியிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களைத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலா் கொ.வீரராகவ ராவ், தொழிலாளா் ஆணையா் .அ.ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.