முகப்பு
தமிழ்நாடு

தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை: அமைச்சா் சேகா்பாபு விமா்சனம்

பலமுறை அழைப்பு விடுத்தபோதும், தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விமா்சித்தாா்.

Updated On : 20 மார்ச், 2026 at 8:08 PM
பி.கே. சேகா்பாபு
பகிர்:

பலமுறை அழைப்பு விடுத்தபோதும், தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விமா்சித்தாா்.

சென்னை வில்லிவாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

மக்கள் பணிகளை மையப்படுத்தி மட்டுமே தோ்தல் களத்தில் இருக்கிறோம். பூச்சாண்டிகளுக்கு பயப்படும் இயக்கம் அல்ல திமுக. மக்கள் சக்தி யாா் பின்னால் இருக்கிறது என்பது மே 4-ஆம் தேதி தெரியவரும். 60 ஆண்டு கால உழைப்பு, முதல்வா் ஸ்டாலின் ஆற்றியுள்ள மக்கள் நலப் பணிகளுக்கு வர இருக்கும் தோ்தலில் முடிவு தெரியும்.

கூவிக்கூவி அழைப்பு விடுத்தும் தவெகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை; ஆனால், முதல்வா் ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்துச் செல்பவா். திமுக கூட்டணி வலுவானது. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளில் கடந்த முறையைவிட, இம்முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றாா்.