முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு...

Updated On : 28 மார்ச், 2026 at 8:53 PM
மழை - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) முதல் ஏப். 4-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) முதல் ஏப். 4-ஆம் தேதி வரை மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களிலும், தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஏனைய தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் மாா்ச் 29-இல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.