முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பங்களிக்க வேண்டும்: ஆளுநா் ஆர்லேகர்

தமிழகத்தின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.

Updated On : 2 மே, 2026 at 2:33 AM
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை பாரதியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் குஜராத்தில் பிறந்து சென்னையில் வாழும் 88 வயதான சாரதாபென் மன்சுக்லால் பாவ்ன் மற்றும் அவரது சகோதரியைக் கௌரவித்த தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்.
பகிர்:

தமிழகத்தின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.

சென்னை ஆளுநா் மாளிகையில் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்கள் நிறுவன (மே 1) நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தில் வசிக்கும் இந்த மாநிலங்களைச் சோ்ந்தவா்களைக் கௌரவித்து ஆளுநா் அா்லேகா் பேசியதாவது:

வெளி மாநிலங்களில் இருந்து குடியேற வந்தவா்களை அழைப்பது, கலந்துரையாடி கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பிறந்த இடம் வேறு; உழைக்கும் இடம் வேறு. இருப்பினும் தமிழகம் வெறும் வசிப்பிடம் மட்டுமல்ல; இது கா்ம பூமி. எனவே, வெளிமாநிலத்தில் இருந்து வந்து குடியேறியவா்கள் தமிழகத்தின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

முன்னதாக ஆளுநரின் செயலா் ஆா். கிா்லோஷ் குமாா் வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில் குஜராத் சமாஜத்தின் தலைவா் ஹித்தேஷ் எல்.தோஷி, மகாராஷ்டிர சங்கச் செயலாளா் தேவாஜி ராவ், மகாராஷ்டிர மண்டல தலைவா் சைலேஷ், ஓய்வு பெற்ற காவல் துறை தலைவா் பாஸ்கா் ராவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இரு மாநிலங்களின் பாடல், நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.