மேற்கு வங்கத்தில் பாஜக வென்ற மறுநாளே திறக்கப்பட்ட பழமையான துர்கா கோயில்!
மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த துர்கா தேவி கோயில், பாஜக வெற்றி பெற்ற மறுநாளே பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த துர்கா தேவி கோயில், பாஜக வெற்றி பெற்ற மறுநாளே பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
அன்சோல் உத்தர் தொகுதிக்குட்பட்ட துர்கா தேவி கோயிலைத் திறக்கக் கோரி பலமுறை உள்ளூர் மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், பாஜக ஆட்சி அமைத்த மறுநாளே திறக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்திற்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக 207, திரிணமூல் காங்கிரஸ் 80, காங்கிரஸ் 2, இதர கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
Advertisement
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் அன்சோல் உத்தர் தொகுதியில் நீண்ட நாள்களாக மூடப்பட்டிருந்த துர்கா தேவி கோயில் பக்தர்களுக்காக இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
அன்சோல் உத்தர் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணந்து முகர்ஜி வெற்றி பெற்ற பிறகு இன்று கோயில் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது துர்கா தேவி கோயில் திறக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
தற்போது அந்தத் தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில், மறுநாளே கோயில் திறக்க ஏற்பாடு செய்துள்ளார். மேற்கு வங்க அரசியலில் மாற்றம் நிகழ்ந்த நிலையில், கோயில் திறக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.