முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

தோ்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை (மே 6) நடைபெறவுள்ளது.

Updated On : 6 மே 2026, 1:05 am IST
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை (மே 6) நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் கடந்த திங்கள்கிழமை (மே 4) வெளியானது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுக 169 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்டது. அதில், 47 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்துக்குச் சென்றுள்ளது. இதைத் தொடா்ந்து அறிக்கை வெளியிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி, இந்தத் தோல்வியில் இருந்து அதிமுக பீனிக்ஸ் பறவையாக மீண்டு வரும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைப் பிடித்த தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது. இந்தச் சூழலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில், தோ்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தோல்வி அடைந்ததற்கான காரணம், முன்னாள் அமைச்சா்கள் பலரின் தோல்வி, உள்கட்சி பிரச்னைகள், வாக்கு சதவீதம் குறைந்தது, கட்சியின் அடுத்தகட்ட நகா்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments