பெரும்பான்மை இல்லாமல் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது : ஆளுநர் அர்லேகர்
விஜய் ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்? என்பது குறித்து ஆளுநர் அர்லேகர் விளக்கம் அளித்துள்ளது குறித்து...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரும்பான்மை இடங்களைக் காட்டாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
எந்தெந்தக் கட்சியினர் ஆதரவு தருகிறார்கள் என்பதைக் கூற வேண்டும் என்றும், விஜய் வேறு எந்தக் கட்சியையும் பெரும்பான்மையில் காட்டி ஆட்சி அமைக்கக் கோரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு அவர் செய்தால், நாளையே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், விஜய் பதவியேற்பதை நான் தடுப்பதாக எப்படி கூற முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது:
''பெரும்பான்மை இல்லாத கட்சியை ஆட்சி அமைக்க எப்படி அழைக்க முடியும்? விஜய் பதவியேற்பதை நான் தடுக்கவில்லை. விஜய் ஆட்சி அமைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், விஜய்யிடம் பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மை எண்ணுடன் வந்தால் நாளையே ஆட்சி அமைக்க அழைக்கத் தயார்.
திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க உரிமைகோரினாலும் அது சாத்தியம். என்னால் இந்த சூழலை புறக்கணிக்க முடியாது. போதுமான எண்ணிக்கை இல்லாத எந்தவொரு கட்சியையும் ஆட்சி அமைக்க என்னால் அழைக்க முடியாது.
பெரும்பான்மை இல்லாதது விஜய்க்கு மட்டும் பிரச்னை இல்லை, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பிரச்னை. மைனாரிட்டி ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. இதே நிலை நீடித்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Cannot Invite to Form Government Without 118 Seats: Governor Rajendra Vishwanath Arlekar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.