எப்போதும் திமுகவுடன் இருப்போம்! நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள ஐயூஎம்எல்!
எப்போதும் திமுகவுடன் இருப்போம் என்ற ஐயூஎம்எல்-இன் நிலைப்பாடு குறித்து...
எப்போதும் திமுகவுடன் இருப்போம் என்ற தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்) கட்சி தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தவெக தலைமையில் ஆட்சியமைக்க118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பதால் காங்கிரஸ் தனது 5 உறுப்பினர்களுடன் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது.
மேலும், இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் தவெகவுக்கான தனது ஆதரவை இன்று (மே 8) தெரிவித்துள்ளது. விசிக ஆதரவு தெரிவிக்குமா? இல்லையா? என்பது குறித்து விவாததிக்கப்பட்டு வருகின்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் ஏற்கெனவே, தவெக சார்பில் ஐயூஎம்எல்-இன் ஆதரவை நாடியபோதே, அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், “எங்கள் முடிவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் உள்ளது. அவர் என்ன முடிவெடுத்தாலும், அது எங்களுக்கு ஏற்புடையதே” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், ஐயூஎம்எல் கட்சி தனது எக்ஸ் தளத்தில், “நேற்றும் இருந்தோம்! இன்றும் இருக்கிறோம்!! நாளையும் இருப்போம்!!!” எனப் பதிவிட்டுள்ளது அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதைக் காட்டுகிறது.
The IUML has stated that it remains firm in its stance that it will always stand with the DMK.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.