ஆளுநர் மாளிகையில் விஜய்!
ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க மீண்டும் உரிமை கோரிய விஜய்!
சென்னை : தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று(மே 9) மாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கிட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் அனுமதி கோரிய நிலையில், அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, மாலை 6.15 மணியளவில் பட்டினப்பாக்கத்தில் உள்ள தமது வீட்டிலிருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்ட விஜய் மக்கள் மாளிகையைச் சென்றடைந்தார். அவருடன் ஆளுநர் மாளிகைக்கு தவெக ஆதரவுக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சென்றிருக்கின்றனர்.
மொத்தம் 120 எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக விஜய் தான் எடுத்துச்சென்றுள்ள ஆட்சியமைக்க உரிமைகோரும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை ஏற்றுக்கொண்டு தமிழக ஆளுநர் விஜய் தலைமையிலான அரசு அமைய அனுமதிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Advertisement
Advertisement
ஆட்சியமைக்க உரிமை கோரி ஏற்கெனவே 3 முறை ஆளுநரைச் சந்தித்து ஏமாற்றத்துடன் திரும்பிய விஜய்யின் 4-ஆவது சந்திப்பு தித்திப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தவெகவுக்கு (விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் தவெகவில் 107* எம்எல்ஏக்கள்) காங்கிரஸ்(5), இந்திய கம்யூனிஸ்ட்(2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(2), விடுதலை சிறுத்தைகள்(2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(2) என மொத்தம் 120 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Vijay reaches to TN Governor
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.