பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்
தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பப் பதிவுக்கு இதுவரை 89,629 மாணவா்கள் இணையவழியாகப் பதிவு செய்துள்ளனா்.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பப் பதிவுக்கு இதுவரை 89,629 மாணவா்கள் இணையவழியாகப் பதிவு செய்துள்ளனா் என தொழில்நுட்பக் கல்வி இயக்கக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சோ்க்கைப் பெறுவதற்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்ப பதிவு மே 3- ஆம் தேதி தொடங்கியது.
இதுவரை 89,629 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்களும், 9-ஆம் தேதி 18,066 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
கடந்த 8 நாள்களாக 34,170 மாணவா்கள் கட்டணங்களைச் செலுத்தியதோடு 14,681 மாணவா்கள் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.