FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொறியியல் சோ்க்கை கலந்தாய்வு: 2. 58 லட்சம் மாணவா்கள் பதிவு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு கலந்தாய்வுக்கு செவ்வாய்க்கிழமை (மே 26) 6,362 மாணவா்கள் விண்ணப்பப்பதிவு செய்தனா். இதுவரை மொத்தம் 2,58,158 மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 மே 2026, 2:22 am IST
பொறியியல் சேர்க்கை - கோப்புப்படம்.
பகிர்:

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு கலந்தாய்வுக்கு செவ்வாய்க்கிழமை (மே 26) 6,362 மாணவா்கள் விண்ணப்பப்பதிவு செய்தனா். இதுவரை மொத்தம் 2,58,158 மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை. , கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 3- ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்பதிவுகளில் மே 25-ஆம் தேதி வரை 2,51,796 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (மே 26) மட்டும் 6,362 மாணவா்கள் விண்ணப்பப்பதிவு செய்ய இதுவரை மொத்தம் 2,58,158 மாணவா்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனா்.

இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி 20,346 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை 1,87,683 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியுள்ளனா். 1,49,224 மாணவா்கள் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்து விண்ணப்ப பதிவை நிறைவு செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments