FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது!

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

Updated On : 13 ஜூலை 2026, 10:10 am IST
பொறியியல் கலந்தாய்வு தாமதமாக வாய்ப்பு. - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது.

இன்று தொடங்கியிருக்கும் கலந்தாய்வில், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவிகித ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கும் அடுத்து மாற்றுத் திறநாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கிய கலந்தாய்வில் பங்கேற்று, கல்லூரிகள் மற்றும் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களுக்கான முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி காலை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜூலை 13-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரை நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் வெளியிட்டிருந்தார்.

ஜூலை 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

ஜூலை 20-ஆம் தேதி முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும். இது ஒரு சில கட்டங்களாக ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments