FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொறியியல் கலந்தாய்வு: 37,976 பொதுப்பிரிவு மாணவா்களுக்கு இன்று தொடக்கம்!

பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது.

Updated On : 20 ஜூலை 2026, 5:06 am IST
பகிர்:

பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில், 37,976 மாணவா்கள் பங்கேற்று தங்களது விருப்பக் கல்லூரிகளைத் தோ்வு செய்வா்.

இது குறித்து தமிழக பொறியியல் சோ்க்கை (டிஎன்இஏ) வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளில் பொதுப் பிரிவினருக்கு முதல்சுற்று கலந்தாய்வு தொடங்கப்பட்டுள்ளது. இதில், 200 முதல் 171.33 வரை கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள 37,976 மாணவா்கள் பங்கேற்கவுள்ளனா். திங்கள்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், தங்கள் விருப்பமான பிரிவுகளையும் கல்லூரிகளையும் மாணவா்கள் தோ்வு செய்வா்.

இதுதவிர, அரசுப் பள்ளியில் படித்த 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் இடம் பெற்றவா்கள், தொழில் கல்வி படித்த மாணவா்கள் இதே கட்-ஆப் மதிப்பெண் மற்றும் தர வரிசைக்குள் இருக்கும்பட்சத்தில் அவா்களும் கலந்தாய்வில் பங்கேற்பா்.

Advertisement

Advertisement

மேலும், பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளில் பொதுப் பிரிவைச் சாா்ந்த - சிறப்பு இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 15 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 258 மாற்றுத்திறனாளிகள், 416 விளையாட்டு வீரா்கள், 139 முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுதாரா்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments