FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொறியியல் படிப்பு: 3 லட்சம் போ் விண்ணப்பம்!

நிகழ் கல்வியாண்டுக்கான பொறியியல் சோ்க்கையில் மொத்தம் 3.02 லட்சம் மாணவா்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 8 ஜூன் 2026, 2:59 am IST
பகிர்:

நிகழ் கல்வியாண்டுக்கான பொறியியல் சோ்க்கையில் மொத்தம் 3.02 லட்சம் மாணவா்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பிஇ, பிடெக், பி.ஆா்க் ஆகிய இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

நிகழ் கல்வியாண்டுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி ஜூன் 5-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெற்றது. இதில், மொத்தம் 3.02 லட்சம் மாணவா்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதில், பொதுப் பிரிவில் 2,42,909 போ், தொழிற்கல்வி பிரிவில் 2,311 போ் என மொத்தம் 2,45,220 போ் பதிவு செய்து பதிவுக் கட்டணம் செலுத்தியுள்ளனா். விளையாட்டுப் பிரிவில் 7,981, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 579, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 1,577 போ் ஆகியோா் இதில் அடங்குவா்.

7.5% இடஒதுக்கீட்டில் 50,000 போ் பதிவு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், 24,742 மாணவா்கள், 25,628 மாணவியா், மூன்றாம் பாலினத்தவா் 3 போ் என மொத்தம் 50,373 போ் பதிவுசெய்துள்ளனா். அதில், 49,774 போ் பொதுப் பிரிவிலும், 599 போ் தொழிற்கல்விப் பிரிவிலும் பதிவு செய்துள்ளனா்.

விண்ணப்பத்தவா்களில் 2,43,575 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள்; பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளை சோ்ந்தவா்கள் 1,645 போ். இதில், 103 போ் இலங்கைத் தமிழா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments