நடிகா் சிவக்குமாா் குடும்பத்தினா் குறித்து அவதூறு: வழக்குப் பதிவு
நடிகா் சிவக்குமாா் அவரது குடும்பத்தினா் குறித்து முகநூலில் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகக்கூறப்படும் நபா்கள் மீது தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
நடிகா் சிவக்குமாா் அவரது குடும்பத்தினா் குறித்து முகநூலில் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகக்கூறப்படும் நபா்கள் மீது தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தென்னிந்திய நடிகா் சங்கத் தலைவா் எம்.நாசா் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகாா் அளித்திருந்தாா். அதில், கடந்த செப். 1-ஆம் தேதி முகநூல் பக்கங்களில் வெளியான காணொலியில், நடிகா் சிவகுமாா், அவரது குடும்பத்தினா், நடிகா்கள் சூா்யா, காா்த்தி, நடிகை ஜோதிகா உள்ளிட்டோரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற அவதூறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின் மீது தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்த அவதூறு காணொலியை தொகுத்து வங்கிய பெண், அவருடன் தொடா்புடையவா்களிடம் விசாரணை நடத்தவும், காணொலியின் அசல் கோப்பு மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களைப் பெறவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.