முகப்பு
தமிழ்நாடு

தமிழக பேரவையில் ஜோசப் விஜய் தவிர்த்து மேலும் 9 விஜய் எம்எல்ஏக்கள்!

தமிழக சட்டப்பேரவையில் ஜோசப் விஜய் தவிர்த்து மேலும் 9 விஜய் எம்எல்ஏக்கள் உள்ளனர்.

பேரவை - DPS
பகிர்:

சென்னை : 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால அவைத் தலைவர் சோழவந்தான் கருப்பையா, புதிதாகத் தேர்வான உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நேற்று தமிழக சட்டப்பேரவையில் ஏராளமானோர் முதல் முறை எம்எல்ஏக்கள் என்பதால் சில ஆச்சரியமான நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. கிட்டத்தட்ட 10 எம்எல்ஏக்களுக்கும் மேல் சட்டப்பேரவையின் முதல் நாளில் தங்களது வெற்றிச் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று தெரியாமல் மறந்து வந்துவிட்டனர். இதனால் அவர்களை அழைத்த போது அவர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்க முடியாமல் திரும்பிச் சென்றனர். பிறகு அவர்களது வெற்றிச் சான்றிதழ் கொண்டு வரப்பட்ட பதவி யேற்றுக் கொண்டனர்.

நேற்று எம்எல்ஏக்களை அழைத்தபோதுதான் ஒரு சுவாரசியமான நிகழ்வு தெரிய வந்தது. அதாவது, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தவிர்த்து மேலும் 9 பேர் விஜய் என்ற பெயருடன் இருப்பது.

Advertisement

Advertisement

தவெக கட்சிக்குள் 9 விஜய் இருக்கிறார்கள். உசிலம்பட்டி விஜய், தஞ்சையைச் சேர்ந்த விஜய் சரவணன், சேலம் தெற்கு தொகுதியில் விஜய் தமிழன் பார்த்திபன், ராயுபுரம் எம்எல்ஏ விஜய் தாமு, ஈரோடு கிழக்கில் விஜய் பாலாஜி, மாதவரத்தைச் சேர்ந்த எம்எல் விஜய் பிரபு, திருவெறும்பூரைச் சேர்ந்த நாவல்பட்டு விஜி என்கிற விஜய் பிரபு, கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த விஜயகுமார், திருப்போரூரைச் சேர்ந்த பி விஜயராஜ் ஆகியோர் எம்எல்ஏக்களாக உள்ளனர்.

இதில் சிலரது உண்மையான பெயரும், சிலர் விஜய் பெயரை தங்கள் பெயருடன் இணைத்துக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments