தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்
தவெக ஆட்சியை ஆதரிப்பதாக சி.வி. சண்முகம் ஆதரவு அதிமுக முடிவு.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ளது. பிளவை நோக்கி அக்கட்சி சென்று கொண்டிருக்கிறது.
சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணிகளாக இடைக்கால சட்டப்பேரவைத் தலைவரிடம் திங்கள்கிழமை கடிதம் கொடுத்ததன் மூலம் அக்கட்சியில் நிலவி வரும் கோஷ்டி மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக சென்னையில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
”சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடைந்துள்ளது. விஜய் முதல்வராக வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளனர். அதை அதிமுக வரவேற்கிறது.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம்.
திமுகவை எதிர்த்து 50 ஆண்டுகளாக அரசியல் செய்து வருகிறோம். திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பெரும்பாலான அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர்” என்றார்.
Former Minister C.V. Shanmugam has stated that he has decided to support the administration of the Tamilaga Vettri Kazhagam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.