வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்
தவெக வெற்றி குறித்து முதல்வர் விஜய் தெரிவித்தது குறித்து...
நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு வெற்றி நம்பிக்கை இல்லாததால் இரண்டு இடங்களில் போட்டியிட்டு ஒன்றை ராஜிநாமா செய்துள்ளார். தொகுதி மக்களுக்கு இன்னும் நன்றிகூட தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் விமர்சனம் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்து முதல்வர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.
நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர்.
நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க.
நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Do you still not understand the magnitude of our victory, even after witnessing it in constituencies such as Kolathur? asked Chief Minister Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.