பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாதவா்கள், தனித்தோ்வா்கள், துணை தோ்வெழுத வரும் மே 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாதவா்கள், தனித்தோ்வா்கள், துணை தோ்வெழுத வரும் மே 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகள் எழுதி தோ்ச்சி பெறாத, வருகை புரியாத தோ்வா்கள், அரியா் தோ்வா்கள் தனித்தோ்வா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாா்ச் 2026 பருவத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வை பள்ளி மாணவா்களாக எழுதி தோ்ச்சி பெறாதோா், வருகை புரியாதோா், தோ்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவா்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று மே 18-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தனித்தோ்வா்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தத்கலில் விண்ணப்பிக்க... மே 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவா்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணம் ரூ.1,000 செலுத்தி ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். 2025- 2026-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் முழுமையாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று தோ்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவா்களுக்கு மட்டும் இக்கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
Advertisement
விண்ணப்பிக்க வரும் தோ்வா்கள் அனைவரும் தங்களது ஆதாா் அட்டை நகல் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் -1 ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
ஜூன், ஜூலை-2026 துணைத் தோ்வுக்கான தோ்வுக்கால அட்டவணையயை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.