‘உடன்பிறப்பின் குரல்’.. தேர்தல் தோல்வி பற்றி திமுகவினரிடம் கருத்துக்கேட்கும் ஸ்டாலின்!
தேர்தல் தோல்விக்கான காரணம் பற்றி திமுகவினரிடம் கருத்துகளைக் கேட்க ஸ்டாலினின் ‘உடன்பிறப்புக் குரல்’ வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து திமுகவினரிடம் கருத்துகளைக் கேட்க ஸ்டாலினின் ‘உடன்பிறப்புக் குரல்’ வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் யாரும் எதிர்பார்த்திராத வகையில், வெறும் 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதிர்ச்சியளிக்கும் விதமாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், அவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியடைந்தார்.
Advertisement
Advertisement
அதேபோல, அமைச்சர்கள் அன்பில் மகேஸ், துரைமுருகன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, ஆவடி நாசர், கீதா ஜீவன், மா. சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன், சு. முத்துசாமி உள்பட 15 அமைச்சர்கள் தோல்வியைடந்தனர்.
சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, துறைமுகம் தொகுதிகளைத் தவிர்த்து மற்ற 14 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை, தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், “என்ன நடந்தாலும், சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதிக்கும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான்.
அதுவும் நமது கூட்டணியில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடுதான் ஆட்சி அமைந்திருக்கிறது. நமது கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையே தவிர, கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் என்ன? ஏன் தோல்வி ஏற்பட்டது தொடர்பாக திமுகவினரிடம் கருத்துக்கேட்பதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புதிய வலைதளப் பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
உடன்பிறப்பின் குரல் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வலைதளப்பக்கத்தில் தோல்விக்கான காரணங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Stalin's 'Udanpirappin Kural' website has been created to seek the views of DMK members regarding the reasons for the electoral defeat.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.