முகப்பு
தமிழ்நாடு

11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளைப் பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!

சோழர் கால செப்பேடுகள்: பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!

சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு! - பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவிலிருந்து
பகிர்:

தி ஹேக் : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தில் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமை(மே 15) நெதர்லாந்துக்குச் சென்றடைந்தார். இந்த நிலையில், நெதர்லாந்தில் அவர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியொன்றில், 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்தது நெதர்லாந்து அரசு.

இது குறித்து தமது எக்ஸ் தளப் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அவர், “செப்பேடுகளில் 21 பெரிய தகடுகள் அடங்கிய ஒரு தொகுப்பும் மூன்று சிறிய தகடுகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பெருமளவில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில், முதலாம் ராஜேந்திர சோழன் தமது தந்தையான முதலாம் ராஜராஜனுக்கு வாய்மொழியாக அளித்த வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

செப்பேடுகளில் தமிழ் எழுத்துகள் - பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவிலிருந்து

இவையனைத்தும் சோழர்களின் பெருமையைப் பறைசாற்றுகின்றன. இந்தியாவில் நாம் சோழர்களைக் குறித்தும் அவர்தம் பண்பாடு குறித்தும் மிகுதியாக பெருமைகொள்கிறோம்.

Advertisement

Advertisement

கடந்த 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து நெதர்லாந்தின் ‘லெய்டென்’ பல்கலைக்கழகத்தில் மேற்கண்ட செப்புத் தகடுகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டமைக்காக அந்நாட்டு அரசுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.

செப்பேடுகளைப் பார்வையிடும் பிரதமர் மோடி - பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவிலிருந்து
summary

Netherlands hands back Chola dynasty copper plates to India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments