FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி மனு

தமிழக கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் வட தமிழக தலைவா் பி.சொக்கலிங்கம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பல்வேறு கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் ரூ.500 வரை வசூலிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

கோயில்களில் பணத்தின் அடிப்படையில் கடவுளை தரிசனம் செய்ய பாரபட்சம் காட்டுவது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments