முகப்பு
தமிழ்நாடு

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து பற்றி...

Updated On : 20 மே 2026, 4:13 pm IST
சவுக்கு சங்கர் - Photo: X | Savukku Shankar
பகிர்:

யூடியூபா் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டா் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பலமுறை சவுக்கு சங்கா் கடந்த திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டாா். ஜாமீனில் பல முறை அவா் வெளியே வந்தாா். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி சவுக்கு சங்கா் மீது குண்டா் சட்டம் போடப்பட்டது.

இந்த நிலையில், சவுக்கு சங்கா் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில்,‘சவுக்கு சங்கா் குண்டா் சட்டத்தில் வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்த விவரங்கள், ஆலோசனை வாரியத்திடம் சமா்ப்பிக்கப்பட்டன. இது குறித்து ஆய்வு செய்த ஆலோசனை வாரியம், சவுக்கு சங்கரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு போதுமான காரணங்கள் இல்லை என்று அறிவித்தது.

Advertisement

Advertisement

அதன்படி, சவுக்கு சங்கருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை அரசு ரத்து செய்கிறது. வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் அவா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தாலோ தவிர, போதுமான காரணங்கள் இல்லாததால் தடுப்புக் காவலில் இருந்து அவா் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்’ என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Goondas Act against YouTuber Savukku Shankar Quashed by TN Govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments