அமைச்சரவை விரிவாக்கத்தில் முதல்வர் விஜய்க்கு கூடுதல் துறைகள்!
அமைச்சரவை விரிவாக்கத்தில் முதல்வர் விஜய்க்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து...
அமைச்சரவை விரிவாக்கத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றனர். இருப்பினும், அவர்களுக்கான துறைகள் உடனடியாக ஒதுக்கப்படவில்லை.
அதைத் தொடர்ந்து, மே 11-ஆம் தேதி சட்டப்பேரவை கூடியது. வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்பு, பேரவைத் தலைவர்கள், துணைத் தலைவர் தேர்தல், தவெக அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிப்பது போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
Advertisement
Advertisement
அதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு தொடர்பான பணிகளை முதல்வர் மேற்கொண்டார். அதன்படி, முதல்வர் விஜய்க்கு பொது நிர்வாகம், உள்துறை, காவல் துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளா்ச்சி, குடிநீர் வழங்கல் துறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் முதல்வருக்கான துறையில் கூடுதலாக வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற கடன் சுமை ஒழிப்பு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல, முதல்வரிடம் இருந்த மகளிர் நலம் துறை, அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Additional portfolios have been allocated to Chief Minister C. Joseph Vijay in the cabinet expansion.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.